Thursday 1 December 2011

''உம்மாளே....!! $



எலும்பும்-
 தோலுமானவளே-
என் உம்மாவே!

நெஞ்செலும்பு கறி-
வாங்கி ஆக்கி-
போட்டவளே!

உன் வயித்து பசிய -
அறியாதவளே!

என் வயிறு-
பசியறியாம -
பார்த்து-
 கொண்டவளே!

விறகு கட்டு-
வாங்காம -
காட்ல விறகு -
பொறக்குனவளே!

உன் கையில -
ரேகை கொஞ்சம் -
முள் குத்திய காயம் -
அந்த ரேகையவும் -
மிஞ்சும்!

மிச்சம் புடிச்சி -
பேங்குல போட்டு -
வச்சியா!?

உண்டியலில்-
 கூட்டி -
வச்சியா!?

இல்லை -
இல்லவே-
இல்லை!

உன் புள்ளைங்க -
வயித்ததேன் -
நிரச்ச!

உனக்கு-
 தெரிந்ததெல்லாம் -
''கை' நாட்டு!

நான் போட்டு பாக்கல-
உனக்கு நகை நட்டு!

பொழுது விடியிறதுக்கு -
முன்னேயே -
வேலையை
ஆரம்பிசஅவளே!

பொழுது அடஞ்சும் -
வேலை முடிஞ்ச -
பாடில்ல !

எம்மாவே!

ஆம்பள புள்ளைய -
பெத்தவனு-
பொம்பளைங்க-
சொல்லுசிங்க!

நெஞ்சை -
நிமிர்த்தி கொண்டு -
அலைச்சேன்!

உம்மாவே!
இந்த ஆம்பள புள்ள -
என்ன பண்ணி-
 ''கிழிச்சேன்;'!

சொந்தகார-
 பொம்பளைங்க -
எண்ணம்!
வெளிநாட்ல இருந்து -
எவ்வளவு -
அனுப்புவானுங்களோ-
என்று!

உன் எண்ணமோ-
சாப்பிட்டானுங்களா-
இல்லையோ-
என்று!

மண்ண பானையாவும் -
மண்ணா போன -
பானையாவும்  போறது-
 குயவன் கையிலே!

சிற்பத்தை-
 ரசிக்கிறவங்களுக்கு -
சிற்ப்பியின் கை வலி -
தெரியிறது இல்ல!

மண்ணா போன -
என்னை ''மாளிகை'' -
ஆகினவளே!

''பார்த்து,பார்த்து'-
வளர்த்தவளே!


சிங்கபூர்ல -
சீமாங்குறான்!

சவூதி ஷேக் -
தன் சோக்குல-
 என்கிறான்!

மலேசியா மன்னர் -
மச்சாங்குறான்!

பெத்த தாயை -
நினைக்க-
 மாட்டேங்குறான்!

உனக்கு பிடித்தமா-
நான் நடக்கல-
நீ !
வாழும் காலத்துல!

காலமாகி போன பின்னே-
பிளைட் புடிச்சி -
வந்து என்னத்த -
'கிழிக்க''!?

கண்ணு கலங்காம -
தாயை வச்சி இருந்தவங்களை -
தேடி அலைகிறேன் -
இந்த காலத்துல!

உன் கண்ணு கலங்காம -
நான் நடந்து கொள்ள-
கையேந்தி நிக்கிறேன்-
இறைவனிடத்திலே!

1 comment:

  1. அன்பின் சீனி - அன்னையின் பெருமை புரிவதற்கு நாளாகும். பிரிவினில் தான் புரியும். இன்னொரு பெண நமக்கென வந்த பின்னர் தான் அன்னையின் அருமை நமக்குப் புரியும்............ நல்லதொரு கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete