Monday 2 July 2012

செஞ்ச பாவம்தான் என்ன....?(2 )



விடுதலை பெற்ற-
அறுபது ஆண்டிலேயே!

என்ன மாற்றம்-
வந்துவிட்டது-
நாட்டிலே!?

தேசம் என்றால்-
அனைத்து மக்களும்-
வாழத்தானே!?

ஓன்று மட்டும்-
வாழ மற்றதெல்லாம்-
அழிந்திடனுமோ!?

ஒன்றை கொன்று-
மற்றொன்று வாழ்வது-
காடு!

ஒரே பக்கம் வளர்ச்சி-
அனைத்து பக்கமும்-
தளர்வதா-நாடு!?

ஒன்று-
மக்களுக்கு வாழ-
வழி செய்யுங்கள்!

அல்லது-வாழ நினைப்பவர்களின்
வழியை -
மறைக்காதீர்கள்!

உரிமை கேட்டால்-
"பிரிவினை "-என
பிதற்றுகிறார்கள்!

அரசுகளே! நீங்களே-
நியமித்த "கமிசன்கள்"-
சொல்லவதையும்-
மறுக்குறீர்கள்!

அல்லது-
மறந்து விடுகிறீர்கள்!

ஆந்திரா தந்த-
இட ஒதுக்கீடை-
நீதி மன்றம் தடுக்குது!

"மதவெறி நாயகர்கள்"-
வழக்குகள்-
கிடப்பில் கிடக்குது!

நீதி தேவதை-
கண்களை கட்டி உள்ளது!
பாரபட்சம் பார்க்க -
கூடாதென்பதற்கா!?

இல்லை - குருடாகவே
உள்ளதை -
மறைப்பதுக்கா!?

ஏன் இப்படி-
ஒடுக்கபடுகிறது-
சமூகம்!?

எதற்கு-
ஒடுக்குதலை -செய்கிறது
அரசு நிர்வாகம்!

வாழ வழி-
இல்லை!

வேலை-
வாய்ப்பில்லை!

படிக்க-
இட ஒதுக்கீடு-
இல்லை!

ஆனால்-
குற்றமற்றவனுக்கும்-
இடம் இருக்கு-
சிறைகளிலே!

உண்மை-நிரந்தரமா
உறங்காது!

பொய்கள் எந்நாளும்-
பொழைக்காது!

சத்தியம்-
சாகாது!

அசத்தியம்-
நீண்ட காலம்-
வாழாது!

(குறிப்பு;மகாராஷ்ட்ராவில் உள்ள பதினைந்து
சிறைகளில் அடைபட்டு கிடக்கும்-
மூவாயிரம் முஸ்லிம் கைதிகளில் 70 சதவிகிதம் பேர் நிரபராதிகள்.25 .4 சதவிகிதம் வழக்காட வழக்கறிஞர் கூட இல்லை.ஆதாரம் ;Tata institute of social sciences (TISS) ஆய்வு செய்தது ;)



13 comments:

  1. வழமையான வரிகளுடன் அருமையான கவி நண்பா....

    கடைசி மூன்று தினங்களும் அதிகமான வேலை காரணமாக உங்களுடைய பதிவுகளை படிக்கவில்லை படித்து விட்டு வருகிறேன் இரவைக்குள்

    ReplyDelete
  2. உங்கள் ஆதங்கம்,வேதனை எல்லாமே வார்த்தைகளாக !

    ReplyDelete
  3. அருமையான ஆக்கம்
    பின் குறிப்பு அதிர்ச்சியும் வேதனையும் கூட்டிப்போனது
    மனம் கனக்கச் செய்து போகும் பதிவு

    ReplyDelete
  4. நல்ல கேட்டீங்க சகோ

    ReplyDelete
  5. நெகிழ வைத்த வரிகள் சார் !

    ReplyDelete
  6. கவிதை மனதைக்குடையுது கூடவே இறுதிக்குறிப்பு நெஞ்சைப்பதறவைக்கின்றது சகோ!

    ReplyDelete